செய்திகள்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்

தேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. 

அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது உறுப்­பு­ரையின் பிர­காரம் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளின்­படி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வினால் இவ் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அவ்­வப்­போது திருத்­தங்­க­ளுக்­குட்­பட்டு வந்த தேசிய சம்­ப­ளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்­குழு இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய ஆணைக்­கு­ழுவை நிய­மிப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்­று­முன்­தினம்  நள்­ளி­ரவு வெளி­யி­டப்­பட்­டது.

அரச மற்றும் தனியார் துறை­களின் சம்­ப­ளங்கள் மற்றும் வேத­னங்­களின் பேண்­த­கை­மையை தொடர்ச்­சி­யாக பேணு­வ­தற்­காக அத்­து­றை­களின் சம்­ப­ளங்கள் உள்­ளிட்ட அனைத்து ஊதிய கட்­ட­மைப்­பு­க­ளையும் மீளாய்வு செய்து, அரசத் துறை­யிலும் தனியார் துறை­யிலும் தொழிற்­படை தேவைக்­கேற்ப இதனை மேற்­கொள்­வது இதன் நோக்­க­மாகும்.

உபாலி விஜே­வீ­ரவின் தலை­மை­யி­லான இவ் ஆணைக்­குழு 15 உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்­ளது.  சந்­தி­ராணி சேனா­ரத்ன, கோத்­தா­பய ஜய­ரட்ன, சுஜாதா குரே, மதுரா வேஹேல்ல, எம்.எஸ்.டி.ரண­சிறி, வைத்­தியர் ஆனந்த ஹப்­பு­கொட, உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சஞ்­ஜீவ சோம­ரத்ன, அஜித் நய­ன­காந்த, ரவி லிய­னகே, சரத் எதி­ரி­வீர, பேரா­சி­ரியர் ரஞ்சித் சேனாரத்ன, பொறியியலாளர் ஆர்.எம்.அமரசேகர மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீ ரணவீர, டபிள்யூ.எம்.பியதாச ஆகியோர் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Back to top button