செய்திகள்

அட்சய திருதியை தினமான இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத பணவரவு உண்டாகுமாம்!

இன்று அட்சய திருதி தினமாகும். இது இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படுகின்றது.
இன்றைய நாள் தங்கம் வாங்க சிறந்த நாளாகவும் கருதப்படுகின்றது
அந்தவகையில் இன்றைய ராசி பலனின் யார் யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகுது என்று பார்ப்போம்.
அட்சய திருதியை தினமான இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத பணவரவு உண்டாகுமாம்! 1
மேஷம்
மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.
அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்
மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.
சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
மிதுனம்
சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது.
காரியங்களில் தடை ஏற்பட்டாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்களின் தொடர்பு உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
சிம்மம்
சகோதரர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். மகன் அல்லது மகனின் திருமண முயற்சிகள் நல்லபடி முடியும்.
சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும்.
பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
துலாம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
மனம் உற்சாகமாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
தனுசு
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மகரம்
வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்
நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

Back to top button