செய்திகள்

அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண்

மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவிற்காக போட்டியிட்ட தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எஃப். எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், ‘வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவிலாய ரீதியில்  போட்டிகளை நடத்தி வருகிறது.  
அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் 1
பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இம்முறை ஸ்வீடனில் நடைப்பெற்று வருகின்றது. மூன்று கட்டங்களாக இடம்பெரும் இவ் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.
இத்தொடரில் 20-22 வயதிற்குட்பட்ட, 63kg எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்டு ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் 2
அதுமட்டுமின்றி, இந்த பளுத்தூக்கும் போட்டியின் அரையிறுதி பிரிவில் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார்.
தற்போது அமெரிக்கப் பிரஜையான ஆர்த்தி நிதி  29 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டு தம்பதியினரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் 3
இது குறித்து ஆர்த்தி நிதி ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், “தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்றாலும், தமிழ்நாட்டுடனான தனது உறவு எப்போதும் தொடரும் என்றும், தான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் 4

Back to top button