செய்திகள்

”பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம்- மக்கள் அச்சமடையதேவையில்லை”

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது  கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குழுவினருடையது என சந்தேகிக்கப்படும்  வெடிபொருட்கள் அனைத்தையும் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால தாக்குதல்களிற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களையே மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இருவர் காணப்பட்டனர் அவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்களுடன் கூட்டங்களில் கலந்துகொண்ட பத்துபேர் வரை கைதுசெய்யப்படாமல் உள்ளனர் இவர்களை தேடி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவேண்டாம் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை உறுதி செய்வதற்காக பொலிஸாரையோ பாதுகாப்பு படையினரையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் மக்கள் அச்சமின்றி நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்எனவும் தெரிவித்துள்ளார்.
''பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம்- மக்கள் அச்சமடையதேவையில்லை'' 1

Back to top button