செய்திகள்

பிறந்த தேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

எண் கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டுக்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?
ஆம், இரண்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது.
முன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது தவிர வாழ்வின் மற்ற உண்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது எண்கணிதம். இதனால் முன்ஜென்மத்தில் இருந்து நீங்கள் இந்த ஜென்மத்துக்கு கொண்டுவந்துள்ள விசேஷ குணம் மற்றும் பாடங்கள் பற்றி ஒரு சுருக்கமான செய்தியை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
எண் 1
எண் கணித கணிப்புகளில் எண் 1 இடம்பெற்றிருந்தால் , நீங்கள் உங்கள் ஆன்மாவைப் பட்டினி போட்டிருப்பது தெரிய வரும். உங்களைத் தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை அனுபவிக்க அல்லது உணர ஒருபோதும் நீங்கள் அனுமதிக்கவில்லை.
உங்கள் முன்ஜென்மத்தில் சுய மரியாதை மற்றும் சுய மதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் இவற்றை முழுமையாக பெற சரியான நேரம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆழ் மனது அமைதியை நீங்கள் இந்த ஜென்மத்தில் உணர்ந்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை உணர மற்றவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள்.
எண் 2:
முன்ஜென்மத்தில் பொருள் தேடி அலையும் நிலை தான் உங்களுக்கு இருந்திருக்கும். உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சம்பாதிக்க போராட வேண்டி இருந்திருக்கும். பணத்தை தேடி ஓடிகொண்டே இருந்திருப்பீர்கள். என்ன நடந்திருந்தாலும் உங்கள் ஆன்மா பசியோடு இருந்திருக்கும்.
இந்த கர்ம வினை உங்களுக்கு உணர்த்த விரும்பும் பாடம் என்னவென்றால், இந்த உலகில் பொருள் என்பது எல்லாம் அல்ல, அதைத் தாண்டி சில விஷயங்கள் இந்த உலகில் உள்ளது என்ற கருத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் முழுமை பெற்றதாய் உணர்வதை நிறுத்துங்கள், உங்கள் செயல்களால் நீங்கள் முழுமை பெறுகிறீர்கள் என்பதை இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளுங்கள்.
எண் 3:
உங்கள் முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தின் ஆரம்ப நிலைகளில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்று உங்களால் கூற முடியாது. உங்கள் மனதில் உள்ள கருத்துகளை உங்களால் சரியாக வெளியில் சொல்ல முடியாது. எப்போதும் ஒரு அசௌகரிய மனநிலை, தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், சுய மதிப்பு குறைபாடு ஆகியவற்றுடன் இருப்பீர்கள்.
ஒருவித அடக்குமுறை காரணமாக உங்கள் தனித்தன்மையை வெளிபடுத்தும் வாய்ப்பு சிறிதளவு கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் உங்களுக்கான பாடம், நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்களை முழுவதும் வெளிபடுத்துவது என்பதாகும் . வாய் திறந்து பேசுவதால் உண்டாகும் நன்மைகள் இப்போது உங்களுக்கு புரிய தொடங்கும். இந்த மாதத்திற்கான கிரெடிட் ஸ்கோர் என்னென்னு தெரியுமா? உங்கள் உதவி இல்லாவிட்டால் இந்த சிறுமியின் நிலை மோசமாகி விடும் உங்கள் உதவி இல்லாவிட்டால் இந்த சிறுமியின் நிலை மோசமாகி விடும்.
எண் 4
பாரம்பரியம், குடும்பம், வீடு என்று வரும்போது ஒரு சந்தோசம் இல்லாத சூழ்நிலை உங்கள் முன்ஜென்மத்தில் இருந்திருக்கும். எண்கணிதம் மற்றும் முன்ஜென்ம நிலைகளை ஆராயும்போது, 4ம் எண்ணைக் கொண்டவர்கள் அனாதையாக , கைவிடப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களும் தடை செய்யப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
எதற்காகவும் உங்கள் மனதைரியத்தை இழக்க வேண்டாம், இந்த வாழ்க்கையில் நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுக்கலாம். அன்பு செய்ய கற்றுக் கொள்ளலாம். அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் ஆகியவற்றுடன் நீங்கள் ஆதரவாக இருக்கலாம். உங்களுக்கும் இந்த இன்பம் கிடைக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் இந்த சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கலாம்.
எண் 5:
முன்ஜென்மத்தில் மற்றவரிடம் இருந்து நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான வழிகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் நீங்கள் சுயநலவாதியாகவும் தேவைகேற்ப செயல்படும் ஆளாகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு வேண்டியதை செய்ய முடியாதவர்களை நீங்கள் மதிப்பதில்லை.
இந்த முறை, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் அவர்களை மதிப்பீடு செய்யாமல், அவர்கள் யார் என்ற நோக்கத்தில் மதிப்பீடு செய்வது நல்லது. உங்கள் சொந்த நம்பகத் தன்மை மற்றும் உறுதிப்பாட்டைக் கண்டறிவதற்கு போதுமான அளவுக்கு உங்களை மதிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
எண் 6:
கடந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது. வாழ்க்கை முழுவதும் உடல்நலக் குறைபாடு, மனநிலையில் மாற்றம், உணர்வுரீதியான தொந்தரவு ஆகியவை இருந்திருக்கும். எதிலும் ஈடுபாடு இருக்காது. உங்கள் குடும்பதில் உள்ளவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை செலுத்துவது கடினமாக இருப்பதால் நீங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருப்பீர்கள்.
நீங்கள் அன்புக்காக ஏங்குவீர்கள். இந்த ஜென்மத்தில் எல்லா விதத்திலும் ஒரு சமநிலை உண்டாக, ஒரு அனுபவப்பெற்ற வளர்ச்சி மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர வேண்டும். உங்கள் உடல், மனம், ஆன்மீகம், உணர்வு ஆகியவற்றை சார்ந்த தேவைகளைக் குறித்து கவனம் செலுத்துங்கள். இதனை செய்யவில்லை என்றால், சுய நாசம் அல்லது போதைக்கு அடிமையாவது போன்ற நிலை உண்டாகும்.
எண் 7:
நீங்கள் ஒரு போட்டி மனநிலையில் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ஜென்மம் தேவையே இல்லை. ஆனால் இப்போது இந்த ஜென்மத்தில் வாழ்வில் ஒன்றோடொன்று இணையும் தன்மையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கருணை மற்றும் புரிதலை விதைக்க வேண்டும். மற்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். முன்ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைவதில் உங்களுக்கு பெரிய போராட்டம் இருந்திருக்கும், நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தீர்கள்; சூழ்நிலைகளால் இந்த நிலை உந்தப்பட்டிருக்கலாம், அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவாகவும் இருக்கலாம்.
எண் 8:
உங்கள் எண் கணிப்பு அறிக்கையில் இந்த எண் தோன்றுகையில், கடந்த காலத்தில் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழித்தீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த நிலை உங்கள் முன்ஜென்மத்தில் மட்டுமில்லாமல் இந்த ஜென்மத்தின் கடந்த காலத்தில் கூட இருக்கலாம். உண்மை என்ன என்று பார்ப்பதை விட நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பார்க்கும் தன்மை உடையவராக இருக்கிறீர்கள்.
எதையும் சாதிப்பதற்கு நீங்கள் உந்தப்படவில்லை. மாறாக நீங்களே நகர்ந்து செல்கிறீர்கள். உங்கள் இருப்பு பற்றிய உண்மையை அறிந்து கொள்ள கடுமையாக முயற்சியுங்கள், நீங்கள் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டு பிடியுங்கள். கற்பனை மாயைக்கு சரண் அடையாதீர்கள். இதுவே இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
எண் 9:
உங்கள் முன்ஜென்மத்தில் உங்களுக்கு நடந்த நல்லவற்றை ஆராய்ந்து அறிவது மிகவும் கடினம், ஏனென்றால் உங்களை கீழே விழச் செய்த விஷயங்கள் ஏராளம். ஒருவேளை நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கலாம்,, அழுக்கால் சூழப்பட்டிருக்கலாம் , அல்லது உலகம் முழுவதும் போர், மரணம், அநாகரீகம் நிறைந்த ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.
வாழ்வதற்கு ஏற்ற நிலை இதுவல்ல என்று உங்கள் ஆன்மா உணர்ந்திருக்கிறது. உங்களைச் சுற்றி இருந்தவற்றை நீங்கள் வெறுத்தீர்கள். அழகு, சந்தோசம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இந்த ஜென்மம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எல்லா சூழ்நிலையிலும் நேர்மறை நிலையை எப்படி அடைவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
எண் 11:
எண்கணிதம் மற்றும் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்ளும் சோதனையில் 11 மற்றும் 22 ஆகிய எண்கள் சிறப்பானவை. உங்கள் முன்ஜென்மத்தில் மிகவும் வசதியாக இருந்தீர்கள். இது உங்களுக்கு மனநிறைவையும் கொடுத்தது. வெற்றியின் உயரத்தையும் தோல்வியின் ஆழத்தையும் நீங்கள் உணர்ந்திருக்கவில்லை.
நீங்கள் மிகவும் அடக்கமாக இருந்தீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. உங்கள் ஆன்மாவின் குரலை நீங்கள் கேட்கவில்லை. அந்த குரல் வளர்ந்து வளர்ந்து ஜென்மம் முழுவதும் தொடர்ந்து , ஒரு வாய்ப்பிற்காக இன்று அறியப்படாத ஒரு செயலில் இப்போது இறங்கும் நிலையில் உள்ளீர்கள். சாதனையின் உண்மையான உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள் வசதி மற்றும் தன்னிறைவை அடமானம் வைக்கலாம்.
எண் 22:
நீங்கள் எப்போதும் திறமை உள்ளவராக இருந்திருக்கிறீர்கள், ஆனால் அதனை பகிர்ந்ததில்லை. ஒருவேளை அது உங்களால் முடியாமல் இருந்திருக்கலாம், அல்லது உங்கள் பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் தனித்தன்மையை கொண்டாடுவதற்கு பதிலாக அந்த தன்மைக்குள் உங்களை பொருத்திக் கொண்டு வாழ்ந்திருக்கலாம்.
இந்த ஜென்மத்துக்கான உங்கள் பாடம், உங்கள் படைப்பாற்றலை ஜொலிக்க வையுங்கள், நிழலில் ஒளிந்து கொள்ளாமல் நிஜத்தில் மிளிர்ந்திடுங்கள். மற்றவர் யாராலும் செய்ய முடியாத செயல்களை செய்யும் திறமை உங்களுக்கு உண்டு. உங்கள் மனதின் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்தால், சந்தோஷத்தின் உச்சிக்கும், வெற்றியின் எல்லைக்கும் நீங்கள் சென்று வரலாம். இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றி புரிந்து கொள்வதற்கு முன் ஜென்மத்து பிறப்பு எண்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.
கடந்த ஜென்மத்தில் இருந்து நீங்கள் கொண்டு வந்த கர்மம் மற்றும் ஆற்றல் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது இந்த ஜென்மத்தை கையாள்வதில் ஒரு ஆழ்ந்த நுண்ணறிவை வழங்குகிறது.
உங்கள் வாழ்க்கை பாதை எண், உங்கள் கடந்த கால வாழ்க்கை கணக்கீடு உங்கள் விதியை மற்றும் உங்கள் பாதையை தீர்மானிக்க உதவுகிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இன்னும் சீராக செலுத்த முடியும்.
பிறந்த தேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க..! 1

Back to top button