ஆன்மிகம்

2022 புதன் பெயர்ச்சி! அடுத்த 17 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றி தானாம். – budhan peyarchi 2022

புதன் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறது.

 இந்த ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 2022 ஏப்ரல் 25 ஆம் திகதி செல்லவிருக்கிறது.

இப்போது மேஷ ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெற போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் இனிமையாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணிகளும் பாராட்டைப் பெறும்.

எதிரிகள் அதிகரித்தாலும், உங்களை வீழ்த்த முடியாது. உங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்து நீங்கள் வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் கடன் பண பரிவர்த்தனையை தவிர்க்கவும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தைகளைப் பெற யோகம் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக விரயத்தை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கெட்ட செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் எண்ணத்தில் இருந்தால் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இது சாதகமான நேரம்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பெரும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருக்கும் பணம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். இக்காலத்தில் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் யோகம் உண்டு.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மரியாதை மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும்.

சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வீடு அல்லது வாகனம் வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்களின் திறமையால் கடினமான சூழ்நிலைகளை கூட எளிதாக சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

உங்களின் தைரியம் மற்றும் வலிமையால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் உங்கள் வேலை முடியாமல் போகும். ஆனால் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்திலும் சதியால் பலியாகிவிடாமல் கவனமாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் வேலையை முடித்துவிட்டு எங்கும் சுற்றாமல் வீட்டிற்கு வருவது நல்லது. இந்த காலகட்டத்தில் அதிகப்படியான கடன் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் வெற்றி கிட்டும். திருமணமானவர்களுக்கு மாமியார்-மாமனார் பக்கத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.

கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செரிமான பிரச்சினைகளை அதிகம் சந்திப்பீர்கள். எதிரிகளிடம் இருந்து விலகி இருங்கள். இக்காலத்தில் புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்ளுங்கள்.

யாருக்கும் அதிகப் பணத்தைக் கடனாகக் கொடுக்காதீர்கள், இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும். நீங்கள் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் எல்லா வகையிலும் இக்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உருவாகும். திருமணமாகாதவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் திருடு போக வாய்ப்புள்ளது.

நண்பர்களிடம் இருந்து இனிமையான செய்தி கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை மற்றும் குடியுரிமைக்கான முயற்சிகளை நீங்கள் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால், இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தைரியம் அதிகம் இருப்பதோடு, உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்கான முயற்சிகளை நீங்கள் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்களின் வேலைத் திறன் மற்றும் ஆற்றலின் உதவியுடன், எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் சமாளிப்பீர்கள்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணம் இக்காலத்தில் கிடைக்கும்.

உத்தியோகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. கவனமாக பேசுங்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.  

Back to top button