ஆன்மிகம்

(15.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope

15.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 02 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் ஞாயிற்றுக்கிழமை
திதி சஷ்டி காலை 11.10 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் அனுஷம் மாலை 5.37 வரை பிறகு கேட்டை
யோகம் மரணயோகம்
ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் அசுவினி மாலை 5.37 வரை பிறகு பரணி
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

 

மேஷராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். இன்று சூரியபகவானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதளவு குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

Ad_sayam_ banner_en

ரிஷபராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும்.மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் காரியங்களை சாதித்துக்கொள்ளலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயமும் உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகாவிஷ்ணு வழிபாடு மன மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும் நாள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

Ad_sayam_ banner_en

 

சிம்மராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிலருக்கு நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காண முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கன்னிராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை அகற்றும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.

துலாராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். துர்கை வழிபாடு எதிலும் வெற்றியைத் தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

Ad_sayam_ banner_en

விருச்சிகராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவ வழிபாடு சிரமங்களைப் பெரிதளவு குறைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசுராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட்டு நாளைத் தொடங்குவது நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரராசி அன்பர்களே!

இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிக ரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவி னர்கள் மூலம் எதிர்பாராத பண உதவி கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரவகையில் சுபச்செலவுகள் ஏற்படவாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அம்பிகை வழிபாடு சகல நன்மைகளும் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்

மீனராசி அன்பர்களே!

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவி னர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி? – Coronavirus: Safety and Readiness Tips for You

கொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்

Back to top button