ஆன்மிகம்

குரு பெயர்ச்சி பலன் 2022 – பணம் தேடி வந்து கதவை தட்டும்…கூடவே கெட்டிமேளச்சத்தமும் கேட்கும்

12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப் போகிறார்.

 குரு பலம் கிடைப்பதால் சிலருக்கு காதல் மலரும் கல்யாண யோகமும் கை கூடி வரும்.

இந்த குரு பெயர்ச்சி குரு பார்வையால் யாரெல்லாம் திருமணம் முடிந்து இல்லறத்தில் இணையப்போகிறார்கள் என்று பார்க்கலாம். 

ரிஷபம்

குரு பார்வையால் உங்கள் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை பலத்தால் பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

விருச்சிகம்

உங்களுக்கு குரு பலன் வந்து விட்டுவிட்டது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வரப்போகிறது.

மகரம்

மகர ராசிக்கு  காதல் மலரும் காலம் இது. காதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். 9ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். 

மீனம்

மீனம் ராசிக்கு இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு ஜென்ம குருவாக அமர்கிறார். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும்.

பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் கை கூடி வரும்.

Back to top button