செய்திகள்

இந்திய சுதந்திர தினம்: “வல்லபாய் பட்டேலின் கனவை நனவாக்கியுள்ளோம்” – நரேந்திர மோதி

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசுகிறார்.

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, ” சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்கி உள்ளோம்” என்றார்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நரேந்திர மோதி பேச்சின் சில முக்கிய அம்சங்கள்

  • முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும்.
  • விவசாயிகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்தப்பட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.
  • தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஜல்சக்தி அமைச்சகத்தை அமைத்துள்ளோம்.
  • ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஒருங்கிணைத்த வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
  • 2013- 14 தேர்தலின் போது, அனைவரும் நினைத்தார்கள் இந்த நாட்டை மாற்ற முடியுமா?. தேர்தல் வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். ஒட்டுமொத்த நாடும் எங்கள் பணியை பார்த்தது. எல்லாருக்கும் இந்த நாடு மாறும் என நம்பிக்கை வந்தது. இப்போது தங்களாலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என தனிநபர்கள் நம்புகிறார்கள்.
  • காஷ்மீர் குறித்து பேசிய மோதி, “காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும்.அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும்.”

காஷ்மீரில் உரிமை

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, “காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும். அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.

மேலும் முத்தலாக் சட்டம் பற்றி பேசிய மோதி அது முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கும் என்றார்.

நீரில் உரிமை

ஜல் ஜீவன் மிஷனில் கவனம் செலுத்தி எல்லோருக்கும் தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதம் செய்வோம். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டம்.

நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

“நாம் தேசத்திற்காக வாழ வேண்டிய கால கட்டத்தில் பிறந்திருக்கிறோம். தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய கால கட்டத்தில் இல்லை” – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

ப்ளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தகுந்த மாற்று தர வேண்டும். அவ்வாறு மாற்று தருவது விவாசாயிகளுக்கு உதவும். நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து நாட்டிற்கு உதவ வேண்டும்.

நம்முடைய rupay சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது. ஆனால் கிராமங்களில் இது வர வேண்டும் என்றார் மோதி.

ரசாய உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் பூமியை பாதுகாக்கலாம் என்று அவர் பேசினார்.

Back to top button