ஆன்மிகம்

யாழ். நல்லூர் திருவிழா ! காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – Nallur festival 2021

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

nallur festival 2021
nallur festival 2021

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

யாழ். நல்லூர் திருவிழா ! காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு - Nallur festival 2021 1
nallur festival 2021

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Back to top button