ஆன்மிகம்

தமிழ் புத்தாண்டு பலன்கள்: சுபகிருது வருடத்தால் விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் யோகம் என்ன?

2022-ம் ஆண்டு சுபகிருது தமிழ்புத்தாண்டு முன் குரு, ராகு, கேது, பெயர்ச்சி நடப்பதோடு புத்தாண்டு தொடங்கி இரு வாரத்திலேயே சனி அதிசார பெயர்ச்சி நிகழப்போகிறது.

இப்படி ராகு, கேது, சனி பெயர்ச்சியானது மூன்று கிரகங்களும் பெயர்ச்சி அடைய உள்ளதால், இந்த புத்தாண்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

சுபகிருது கிரக பெயர்ச்சி

60 தமிழ் வருடங்களில் சுபகிருது 36விதாக வருகிறது.இவை ஏப்ரல் 12ம் தேதி ராகு – கேது பெயர்ச்சி நடக்கிறது. இதில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசியிலும் பெயர்ச்சி ஆகி அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அதில் இருப்பார்கள்.

அடுத்து, 13ம் தேதி முழு சுபரான குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி ஆக உள்ளார். 29-ம் தேதி சித்திரை 16 சனி பகவான், மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு காலை 7.54 மணிக்கு அதிசாரமாகப் பெயர்ச்சி ஆவார்.

பின்னர் ஆனி 28 (ஜூலை 12) செவ்வாய்க் கிழமை அன்று வக்ர கதியாக மீண்டும் மகர ராசிக்கு சனி பகவான் திரும்புவார். தொடர்ந்து, சித்திரை 1 அன்று மேஷ லக்கினம், திரியோதசி திதி, பூரம் நட்சத்திரம், வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது.

சுபகிருது புத்தாண்டு பலன்கள்

இந்த சுபகிருதுவால் நாட்டில் சிறப்பாக மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும். செலவ நிலை உயரும். அதே சமயம் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளத்தால் பல இடங்களில் சேதத்தை சந்திக்க நேரிடும். அதிலும், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்கள் விருச்சிக ராசியிருக்கு தொட்டது துலங்கக்கூடிய மாதமாக அற்புத பலன்கள் கிடைக்கும்.

எந்த ஒரு புதிய முயற்சிகளையும் தயக்கமின்றி மேற்கொள்ளலாம். வீடு வாங்கவும், புதிய கடன் வாங்கி அதன் மூலம் உங்களின் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்ய ஏற்ற ஆண்டாக இருக்கும்.

மேலும், தொழில், வியாபாரம் ஆரம்பிக்கவும், அதை விரிவுபடுத்தவும் ஏற்ற ஆண்டாக இருக்கும். பூர்வ புண்ணிய இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு குழந்தை, சொத்து, சுகத்தை அள்ளித் தருவார்.

இதனால் வீடு, மனை வாங்கும் கனவு கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களின் முயற்சியால் கனவு நினைவாகக்கூடிய வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் நீங்கி மதிப்பு, மரியாதை பெறக்கூடிய நிலைக்கு உயருவீர்கள்.

ராகு கேது பலன்

6ம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் உங்களின் வருமானத்தை உயர்த்தக்கூடியவராக இருப்பார்.

பெண்கள் தங்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடிய காலமாக இருக்கும்.

தன் கணவர், பிள்ளைகள் மூலம் இருந்த கடினமான நிலை மாறி விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வேலைத் தேடக்கூடிய இளைஞர்களுக்கு நினைத்தபடி நல்ல வேலை அமையும். 

பரிகாரம்

செவ்வாய்க் கிழமைகளில் முருகன் திருக்கோவிலுக்குச் சென்று வருவதும், விளக்கேற்றி வழிபடுவதும் நல்லது.

பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடவும்.

முடிந்தால் ஒரு முறை திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வருவது நல்லது.  

Back to top button