சினிமா
அதள பாதாளத்தில் தமிழ் சினிமா, இத்தனை படங்கள் நஷ்டமா? 2020 படுமோசம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் படம் வந்தது. ஆனால், இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
அதை தொடர்ந்து வந்த பட்டாஸ் படம் போட்ட பணத்தை பெற்றது, பிறகு வந்த அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதில் சைக்கோ மட்டுமே விதிவிலக்கு, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த வருடத்தில் சுமார் 7 வாரங்கள் கடந்த நிலையில் சைக்கோ மட்டும் லாபம் கொடுத்துள்ள படம்.
மற்ற அனைத்து படங்களுமே தோல்வி தான், இப்படி ஆரம்பமே மிக மோசமாக தமிழ் சினிமாவிற்கு தொடங்கியுள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சி தான்.