ஆன்மிகம்

சுபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்.. கடக ராசிக்கு உண்டாகும் யோகம் என்ன?

கடக ராசியினர்கள் தாயுள்ளம் கொண்டவர்களாகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களும், ஆடை, ஆபரணம், அலங்காரம் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள் கடக ராசி.

இவர்களுக்கு குருவின் சுப பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

குழந்தைப் பேற்றுக்கான பாக்கியத்தால் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். பூர்விக சொத்துக்கள் வந்து சேர வாய்ப்புள்ளது.

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் இருக்கும் பிரச்னைகள் நீங்கி மேன்மை பெறுவீர்கள்.

தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். புதிய கிளைகளை திறக்க சிறப்பான வாய்ப்புகள் அமையும்.

உங்கள் வாழ்க்கைத் துணையால் நல்ல லாபமும், நிதி ரீதியான வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

வாழ்க்கைத் துணையின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இடமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.

புதிய வேலை தேடுபவர்களுக்கு அதற்கான சாதக வாய்ப்புகள் உண்டாகும்.

யாருக்கும் வாக்கு கொடுப்பது கூடாது. பேச்சில் கனிவும், செயலில் நிதானமும் தேவை.

பரிகாரம்

மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்யவும். கால பைரவர் வழிபாடு செய்வதால் வாழ்க்கை அற்புதமானதாக மாறும்.

Back to top button