செய்திகள்

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் Theresa May!

பிரிட்டன் பிரதமர்  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 7ம் திகதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் விலகுவதாக Theresa May இன்று அறிவித்துள்ளார். 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் 2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்த முடியாததையடுத்து அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் Theresa May! 1
மக்கள் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ள அவர் புதிய பிரதமர் நாட்டின் நலன்களைப் பேணும்வகையில் செயற்படுவார் எனத் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button