ஆன்மிகம்

வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவானால் அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள் யார் யார் தெரியுமா? – vakra sani peyarchi 2021

vakra sani peyarchi 2021

ஜோதிடத்தில் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி பகவான் நல்ல இடத்தில் அமர்ந்தால் அவரின் தொழில், வியாபாரம், வேலை மேன்மை அடையும்.

அப்படி இல்லாவிட்டால் அவரின் வாழ்வாதாரத்தில் சில ஆட்டம் காணும். அவர் எந்த ராசியில் இருக்கின்றாரோ அவரின் பார்வை பலனால் சில ராசிகளுக்கு கெடுதல் ஏற்பட்டாலும், சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைப்பதாகவே இருக்கும்.

அந்த வகையில் தற்போது மகர ராசியில் அக்டோபர் 11ம் தேதி (புரட்டாசி 25) சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

மகர ராசியிலேயே வக்ர கதியில் இயங்கிக் கொண்டிருந்த, அதாவது பின்னோக்கி நகர்ந்த கொண்டிருந்த சனீஸ்வரன் தற்போது, மீண்டும் சாதாரண நிலை அடைந்து நேர்திசையில் பயணிக்க உள்ளார்.

சனி வக்ர நிவர்த்தி அடையும் நிலையில் இந்த 6 ராசியினர் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அவர்கள் எப்படிப்பட்ட பலன்கள் அனுபவிக்கப்போகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

​மேஷம்: தைரியமும், பலமும் அதிகரிக்கும்   

மகர ராசியிலேயே சனி வக்ர நிவரத்தி அடைவதால் மேஷ ராசியினர், எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்தாலும் அவர்களுக்கு நேர்மறையான பலன்கள் பெறுவார்கள்.

கர்ம காரகன் சாதகமாக அமைந்துள்ளதால் உங்களின் தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும், இதுவரை இருந்த ஏற்ற தாழ்வுகள், சிக்கல்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், அனுபவம் வாய்ந்த துறைசார்ந்த வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் தொடங்குவது நல்லது.

குடும்பத்தில் அமைதியும், மன நிம்மதியும் ஏற்படும். உங்கள் துணையுடனான கருத்து வேறுபாடு நீங்கும். உங்களின் மன வலிமையும், தைரியமும் அதிகரிக்கும்.

​மிதுனம்: தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள் 

புதன் பகவான் ஆளக்கூடிய மிதுன ராசியினருக்கு சனி வழியில் இருந்த பிரச்னைகள் நீங்கி நன்மை அடைவீர்கள். இந்த காலத்தில் உங்களின் ஆரோக்கிய பிரச்னைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும். நாட்பட்ட நோய்கள் தீரும். மாணவர்கள் தங்கள் கல்வியில் மேன்மை அடைவீர்கள்.

வாழ்வில் சில சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். பல அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு துணையாக அமைந்து உங்களின் தடைப்பட்ட பணிகள் நிறைவடையும்.

வர்த்தகர்கள் முதலீட்டை முழுமையாகப் பயன்படுத்தி லாபத்தை அடைவீர்கள்.

​துலாம் : வாகனம் அல்லது சொத்து வாங்க வாய்ப்பு 

உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் சனி பகவான் இருப்பதால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் பெற்றோருடனான உறவில் மகிழ்ச்சி மேம்படும்.

வாகனம், வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளவர்களுக்குச் சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த காலத்தில் உங்களுக்கு பாதகமான சூழல் குறைவாக இருக்கும்.

அக் 11 முதல் உங்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப உறவில் திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்கும். வேலை, குடும்பத்திற்கிடையேயான சமநிலை பேணுவீர்கள்.

​தனுசு: வேலையில் முன்னேற்றம் இருக்கும் 

உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் நடப்பதால் உங்கள் பேச்சு, செயலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

சமூக அளவில் உங்களின் கெளரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும்.

சகோதரர், சகோதரிகளுடனான உறவில் முன்னேற்றம் அடையும். சனியின் நல்ல மாற்றம் உங்களுக்கு முன்பு இருந்த பிரச்சினைகள் நீங்குவதற்கான தீர்வுகள் கிடைக்கும்.

வணிகத்தில் புதிய வாய்ப்பு, வணிகத்தை விரிவாக்குவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

​மகரம்: செல்வத்தைக் குவிக்க வாய்ப்பு ஏற்படும் 

உங்கள் ராசியில் சனியின் வக்ர நிவர்த்தி நிகழ்வதால் பல நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

ஆரோக்கியம் மேம்படும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. நாள்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கல்.

வெளிநாடு தொடபான வேலையில் இருப்பவர்கள் சுப பலன்கள் பெறுவீர்கள். சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் ஏற்படும்.  

​கும்பம்: ஆன்மீகத் துறையில் வெற்றி இருக்கும் 

சனி அதிபதியாக கொண்ட கும்ப ராசியினருக்கு 12ம் வீட்டில் ராசி நாதன் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களுக்கு ஆன்மிக துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஆன்மிகம் தொடபான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாடு தொடர்பான வேலை, வியாபாரம் செய்பவர்களுக்கு சுபமான, சாதகமன பலன் ஏற்படும்.

உங்களின் பண பரிவர்த்தனை விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான மாற்றங்கள் இருக்கும். பணியிடத்தில் உங்களை நோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.

Back to top button