சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து குமரன் விலகல்? சோகத்தில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த குமரன் விலகப்போவதாக எண்ணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், அதுவும் கதிர்- முல்லை ஜோடிக்காகவே அச்சீரியலை பார்ப்பவர்கள் அதிகம்.

அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸ், செல்ல சண்டைகள், கோபம் என இந்த சீன்களுக்காகவே டிஆர்பி எகிறும்.

இத்தொடரில் நடித்து வந்த சித்ரா, தற்கொலை செய்த பின்னர், காவ்யா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இருவருக்கும் ஓரளவு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், சில நாட்களாக குமரன் சீரியலில் வரவில்லை, அவர் வெளியூர் சென்றிருப்பதாக காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குமரன் தன்னுடைய இன்ஸ்டாவில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதாவது, உங்கள் எல்லோருக்கும் ஷோ பிடித்திருக்கும் என நம்புகிறேன். நான் தான் இந்த ஷோவுக்கு பெஸ்ட் ஆடியன்ஸ், முழுக்க சிரித்து கொண்டிருந்தேன்.

மேலும் நீங்கள் ஷோவை மட்டும் தான் பார்த்தீர்கள். அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை. எதுவும் வெட்டப்படவும் இல்லை, சேர்க்கப்படவும் இல்லை.

ஜெயிக்கிறோமோ இல்லையோ, நான் மகிழ்ச்சியாக இருந்தேன் . அதே போல நீங்கள் பார்த்ததை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். தற்போது ஓரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். அடுத்து என்ன?” என பதிவிட்டுள்ளார்.

சீரியலை விட்டு விலகுவதற்கு தான் இந்த பதிவா? என குமரனின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Back to top button