செய்திகள்

இத்தாலிய அரசாங்கங்கள் அடிக்கடி வீழ்ச்சியடைவது ஏன்?

றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன் அர்த்தம் இரண்டாவது உலகப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் இத்தாலியில் பதவியில் இருந்த ஒரு அரசாங்கத்தின் சராசரி காலநீட்சியை உண்மையில்  அதிகரித்தது என்பதேயாகும்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் போது இத்தாலி உலகப்போரின் முடிவுக்கு பின்னரான ( 74 வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலகட்டம் ) அதன் 69 வது அரசாங்கத்தைக் காணும். ஒரு அரசாங்கம் சராசரி 13 மாதங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்திருக்கிறது. இது ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத ‘ சுழலும் கதவு ‘ போன்ற நிலைவரமாகும்.அதே 74 வருட காலகட்டத்தில் ஸ்பெயினில் 23 ; பிரான்சில் 13 ; ஐக்கிய இராச்சியத்தில் 23 ; ஜேர்மனியில் 26 அரசாங்கங்கள் பதவியில் இருந்திருக்கின்றன.

2005 ஆம் ஆண்டில் ஜேர்மன் அரசாங்கத்தின் தலைவராக வந்த அஞ்சலா மெர்கெல் இத்தாலியில் 9 அரசாங்கங்கள் பதவிக்கு வருவதையும் போவதையும் காணக்கூடிய அளவுக்கு நீண்டகாலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்து வருகின்றார்.

இத்தாலிய அரசாங்கங்கள் இந்தளவுக்கு வலுக்கேடானவையாக இருந்து வருவதற்கான காரணம் என்ன?

இத்தாலிய கலாசாரத்தின் குணவியல்பு இந்த பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அரசாங்கங்களில் நம்பிக்கையில்லாத ஒரு  தன்மை அந்த குணவியல்புகளில் ஒன்றாக இருக்கிறது. வரி ஏய்ப்பு மட்டங்கள் உயர்வானவையாகக் காணப்படுவதற்கும் நாட்டின் பெரிய கறுப்புச்சந்தைப் பொருளாதாரத்துக்கும் அந்த கலாசாரமே பங்களிப்புச் செய்கிறது.வலிமையான பிராந்திய அடையாளங்கள் (Strong regional identities ) இன்னொரூ காரணி.

இத்தாலிய தீபகற்பம் நீண்டதொரு வளமான வரலாற்றைக் கொண்டது. ஆனால், ஐக்கியப்பட்ட ஒரு நாடாக இருந்த வரலாறு அதற்கு இல்லை.158 வருடங்கள் மாத்திரமே ஐக்கியப்பட்ட நாடாக இருந்துவரும் இத்தாலியில் விசுவாசங்களும் முன்னுரிமைகளும் இன்னமும்  பிராந்தியத்துக்கு பிராந்தியம் பரந்தளவில் வேறுபடுகின்றன. இத்தாலிய ஒருமைப்படுத்தலின் ( Unification) சிற்பிகளில் ஒருவரான மாசிமோ டி அசெக்லியோ ஒருமைப்படுத்தல் நிறைவுபெற்ற பிறகு செய்த பிரகடனம் மிகவும் பிரபல்யமானது ; அதாவது ” நாம் இத்தாலியை உருவாக்கியிருக்கிறோம்.நாம் இப்போது இத்தாலியர்களை உருவாக்கவேண்டியிருக்கிறது ” என்பதே அந்த பிரகடனம். பலரைப் பொறுத்தவரை, இத்தாலியர்களை உருவாக்கும் அந்த செயன்முறை இன்னமும் தொடருகின்ற ஒன்றே.

ஆனால், மிகப்பெரிய பிரச்சினைகள்  இத்தாலியின் அரசியல் மரபணுவிற்குள் வேகவைக்கப்பட்டு கெட்டியாக்கப்பட்டிருக்கின்றன என்பதே பெரும்பாலான அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது.இத்தாலியின் 1946 அரசியலமைப்பை தயாரித்தவர்கள் பெனிட்டோ முசோலினி போன்று தனிநபரின் கைளில் அளவுகடந்த அதிகாரங்களைக் குவிக்கக்கூடிய முறைமையொன்று குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டார்கள்.  (இத்தாலியை 1922 — 1943 காலகட்டத்தில் ஆட்சிசெய்த முசோலினி நாட்டை இரண்டாவது உலகப்போருக்குள் இழுத்துச்சென்றார்.)

அந்த எச்சரிக்கை உணர்வின் விளைவாகவே ஒப்பீட்டளவில் பலவீனமான ஒரு பிரதமருடன் கூடிய பாராளுமன்ற முறைமை கொண்டுவரப்பட்டது. அந்த முறைமையின் கீழ் சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்க தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு தலைவர் தோல்வி காண்பாரேயானால், அவரும் அவரது முழு அரசாங்கமும் பதவியில் இருந்து இறங்கவேண்டியது அவசியமாகும்.

பரந்த வரிசையான அரசியல் அடையாளங்கள் அதேபோன்றே பெருவாரியான அரசியல் கட்சிகளையும் உருவாக்கின.கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 7 கட்சிகள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றன. குறைந்தது 16 கட்சிகள் தேசிய ரீதியில் ஆகக் குறைந்தது ஒரு இவட்சம் வாக்குகளைப் பெற்றன.மேலும் ஒரு டசினுக்கும் கூடுதலான கட்சிகள் இத்தாலியின் 20 பிராந்தியங்களில் குறைந்தது அரைவாசி பிராந்தியங்களின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றிருந்தன. அரசியல் பலவற்றின் ஆதரவையும் உள்ளடக்கியவையாகவே அரசாங்கங்கள் அடிக்கடி அமைக்கப்படுகின்றன என்பதே இதன் அர்த்தம்.சில சந்தர்ப்பங்களில், ஒரு ஒரு குழு அல்லது இரு குழுக்கள் விலகினால் கூட அரசாங்கம் வீழ்ச்சி காணவேண்டிய நிலைஏற்படுகிறது.

” இத்தாலி அளவுகடந்து  பெருவாரியான அரசியல் கட்சிகளையும பெருவாரியான முரண்டும் நலன்களையும் கொண்டிருக்கிறது.எவ்வளவு அதிகமாக நலன்கள் இருக்கின்னறவோ கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவ்வளவுக்கு கஷ்டமானதாக இருக்கும் ” என்று றோமின் லா சாப்பியன்சா பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளரும் அரசியல் அறிவியலாளருமான அறியானா மொன்டானாரி கூறினார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஜனரஞ்சக கொள்கைகளையுடைய ‘ ஐந்து நட்சத்திர இயக்கத்தின் ‘ (Populist Five – Star Movement) தோற்றமும் அதன் எழுச்சியும் நிலைவரங்களை மேலும் சிக்கலாக்கியது.பாரம்பரியமாக இத்தாலி பெரிய ஒரு  மத்திய வலது அரசியல் கட்சியையும் பெரிய ஒரு மத்திய வலது கட்சியையும் கொண்டிருந்தது. ஐந்து நட்சத்திர இயக்கத்தின்  எழுச்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை வேறுபாட்டைக்கொண்ட மூன்று பெரிய வாக்காளர் திரட்சிகளை (Large blocks of voters) உருவாக்கியது ” என்று வரலாற்றியல் ஆய்வுகளுக்கான சல்வெமினி நிறுவனத்தைச் சேர்ந்த வரலாற்றியலாளரும் ஆராய்ச்சியாளருமான குளோடியோ வேர்செலி கூறினார்.

” இத்தாலியின் அரசியல் சஞ்சலத்துக்கு பல காரணிகள் பங்களிப்புச் செய்திருக்கின்றன.ஆனால், பிந்திய காரணி மூன்று முக்கிய அரசியல் துருவங்களை ( Major political poles) அடிப்படையாகக் கொண்டதாகும்.ஒரு துருவத்துடன் அரசாங்கத்தை அமைப்பது கஷ்டமானதாகும்.அதேவேளை, மூன்று துருவங்களில் ஏதாவது இரண்டு துருவங்கள் இணைந்தால் கூட்டணி பலவீனமானதாக இருக்கும் ” என்று வேர்செலி நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

தற்போது வீழ்ச்சியடைந்த பிரதமர் கொன்ரேயின் அரசாங்கத்துக்கு நடந்தது அது தான். அது ஐந்து நட்சத்திர இயக்கத்துடன் வலதுசாரி அணியையும் கொண்டதாக சஞ்சலமான கூட்டணியாக அமைக்கப்பட்டிருந்தது.ஐந்து நட்சத்திர இயக்கத்துக்கும் மத்திய வலது ஜனநாயக கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அடிப்டையாகக் கொண்டதாக அடுத்த அரசாங்கம் அமையக்கூடிய சாதக நிலையே காணப்படுகிறது. அதற்கும் கூட கொன்ரே அவர்களே தலைமைதாங்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

Back to top button