செய்திகள்

இலங்கை அரசியலில் அதிரடி : பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளர அரங்கில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சம்மேளனம் இடம்பெறவுள்ளது.

இதில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ , கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பார்.

இந்த சம்மேளனம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  கட்சியின் உள்ளக விவகாரம் என்பதால் வெளித்தரப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று அதன் போஷகர் பசில் ராபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

சுமார் 100 நாட்கள் என்ற கால எல்லையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தீர்மானங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சம்மேளனத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.

வேட்பாளர் தெரிவு முற்று முழுதாக மஹிந்த ராஜபக்ஷவை சார்ந்தது என்றாலும் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி நாட்டின் தேவைகளை கருத்தில் கொண்டே இந்த தெரிவு இடம்பெற்றது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

பொதுஜன  பெரமுனவுடன் இணக்கமாக செயற்படும் பங்காளி கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன  பெரமுன  சார்பில் உத்தியோகப்பூரவ அழைப்பு விடுக்கப்படவில்லை.

பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையாததால் இந்த சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்திற்காகத் தான் சு.க.விற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் கடந்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.  எனினும் அன்று காணப்பட்ட அரசியல் மற்றும்  இதர பிரச்சனைகளினால் அது பிற்போடப்பட்டது. எனினும் தேர்தல் காலம் நெருங்குவதால் மேலும் காலம் தாழ்த்தாது இன்று சம்மேளனத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரீஸ் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் , அதன் உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் இந்த சம்மேளனத்தில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

 updates of this page based on virakesari.lk, bbc.com/tamil, cineulagam.com, hirunews.lk/sooriyanfmnews, etc…

Back to top button