ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
ஏமனின் சாடா மாகாணத்தின் மனப்ஹி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015 ஆண்டு முதல் கடும் சண்டை நடந்து வருகிறது.
அத்தோடு உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்து வருகிறது.
அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சவுதி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஏமனின் சாடா மாகாணத்தின் மனப்ஹி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source: virakesari.lk