சினிமா

நண்பர் அஜித் என்று சொன்னதும் அரங்கத்தில் நடந்தது இது தான், டிவியில் கூட காட்டியிருக்க மாட்டார்கள்!

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் எளிமையாக நடந்து முடிந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் செம்ம கலக்கலாக உடையணிந்து வந்தார்.

இதுக்குறித்து தொகுப்பாளர் கேட்கும் போது ‘நம்ம நண்பர் அஜித்’ மாதிரி உடையணிந்து வரலாம் என்று விஜய் கூற, அரங்கமே அதிர்ந்தது.

ஆனால், இந்த விழாவை தொகுத்து வழங்கிய விஜே விஜய், சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ‘நான் அந்த கேள்வியை கேட்டதும், அண்ணன் நம்ம நண்பர் அஜித் மாதிரி உடையணிந்து வந்துள்ளேன், என்று சொன்னார்.

அதை தொடர்ந்து உங்களுக்கு டிவியில் எத்தனை நிமிடம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், அரங்கத்தில் கைத்தட்டல் அடங்கவே 5 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று எல்லோரும் தளபதி தளபதி தளபதி என்று கத்திக்கொண்டே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

Back to top button