விளையாட்டு
உலகக் கோப்பை 2019: இந்தியா 20 ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?
DIBYANGSHU SARKAR
இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆட்டம் தடைபட்டது.
மூன்று மணிக்கு ஆட்டத்தை தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் ஆராய்வர்.
மதியம் நான்கு மணிக்கு மேலும் ஆட்டம் தடைப்பட்டால் ஓவர்கள் இழப்பு ஏற்படும்.
ஐசிசி விதிகளின் படி இன்று எப்படியும் ஆட்டத்தை முடிக்க நடுவர்கள் விரும்புவர்.
ஒருவேளை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு இந்தியா 20 ஓவர்கள் மட்டுமே விளையாடக்கூடிய சூழல் ஏற்பட்டால் டக் வொர்த் லூயிஸ் விதிகளின் படி
இந்திய அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெறும்.
ஒருநாள் போட்டிகளில் 120 பந்துகளில் 148 ரன்கள் என்பது எளிதான காரியமல்ல.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ரன்கள் சேர்க்க கடுமையாக திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
பிபிசி வெதர் – லண்டனில் இருந்து நிக்கி பெர்ரி
”நான்கு மணி வரையிலும் கூட மழை தொடரும். தற்போது சூழலில் மழை நிற்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
ஐ லாஃப் மேனில் தற்போது மழை இருக்கிறது.ஆகவே இந்த மழை இன்னும் சற்று நேரம் நீடிக்கலாம். முழுமையாக மழை நிற்க ஐந்து மணி கூட ஆகலாம்.”
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே குறித்து ஐசிசி விதிகள் என்ன சொல்கின்றன?
இரண்டு மணி நேரத்துக்கு மேல் தான் ஆட்டத்தில் ஓவர்கள் குறைப்பது குறித்து கணக்கீடு செய்யமுடியும்.
அதாவது, இந்திய நேரப்படி இரவு 8.30 மணி வரை ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டாலும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் அதே நிலையில் ஆட்டம் தொடரும்.
ஒருவேளை மழையால் இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமான ஆட்டம் தடைபட்டால் நியூசிலாந்து இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அறிவிக்கப்படும்.
நியூசிலாந்து அணி 20 ஓவர்களை கடந்து பேட்டிங் செய்துவிட்டது. ஆதனால் இந்திய அணி 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யும் சூழல் உருவானால் கூட அதனடிப்படையில் இன்றே போட்டி முடித்து வைக்கப்படும்.
ஒருவேளை மழை காரணமாக இந்தியா 20 ஓவர்கள் கூட ஆட முடியாத சூழல் ஏற்பட்டால் நாளை ஆட்டம் தொடரும். அதாவது எந்த ஓவரில் எந்த பந்தில் ஆட்டம் தடைபட்டதோ அதே நிலையில் இருந்து ஆட்டம் தொடரும்.
நாளைய தினமும் மழை பெய்து ஆட்டம் பாதிக்கப்பட்டால் நடுவர்களை வேறு வாய்ப்பில்லை. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்தை விட முன்னிலையில் இருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் இந்தியா.
STU FORSTER-IDI
இதுவரை ஆட்டத்தில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
முதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்தது இந்தியா. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில் ரன் கணக்கைத் துவக்கியது நியூசிலாந்து.
நான்காவது ஓவரில் கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.
அதன்பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து பொறுமையாக விளையாடினர்.
ஜடேஜா பந்தில் நிக்கோல்ஸ் வீழ்ந்தார்.
கேன் வில்லியம்சன் – ராஸ் டெய்லர் அணி மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவில்லை.
கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 67 ரன்களில் அவுட் ஆனார்.
நீஷம், கிராந்தோம் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.
ராஸ் டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்திய அணி தரப்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். சாஹலின் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள்.