சினிமா

அஜித்தின் ‘வலிமை’ பட பைக் சாகசம் – வைரலாகும் புகைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்கள் – Ajith Kumar Valimai Update

“வலிமை” படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அஜித்

அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளைக் கடந்து விட்டபோது, படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக போனி கபூரிடம் படத்தின் அப்டேட் குறித்து கேட்டு தொடர்ந்து ட்விட் செய்து வந்தனர். சமீபத்தில் மதுரையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு போஸ்டர் அடிக்கும் அளவுக்குச் சென்றது.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் ஒரு காட்சிக்காக அஜித் செய்த பைக் சாகச படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டிங்கில் உள்ள இந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக படம் தொடர்பான யாரும் இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஓட்டும் பைக் பற்றிய தகவல்கள்…

எம்.வி அகஸ்டா ப்ருட்டேல் 800(MV Agusta Brutale 800) ஆகும். இந்த பைக்கின் இந்திய விலை 15.59 லட்சம் ஆகும். இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவத்தின் பைக்தான் அகஸ்டா. இந்த நிறுவனத்தால் இந்தியாவில் விற்கப்படும் விலை குறைந்த பைக் இதுதான்.

‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்…..

ஹைதராபாதில் நடைபெற்று வந்த வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தன. அதில் அஜித் மெலிந்த தோற்றத்தில் உள்ளார். பொதுமுடக்க சமயத்தில் அஜித் வீட்டில் இருந்தவாரே தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.

Back to top button