செய்திகள்

ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள்!

12வது ஐ.பி.எல் டி20 தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைகள் குறித்து இங்கு காண்போம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் ஐ.பி.எல் டி20 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை சென்னை அணி படைத்த சாதனைகள் குறித்து இங்கு காண்போம்.
 • அதிக போட்டிகள் கேப்டனாக பணியாற்றிய வீரர் – எம்.எஸ்.டோனி (143 போட்டிகள்)
 • ஐ.பி.எல்-யில் அடிக்கப்பட்ட நீளமான சிக்ஸ் – 125 மீற்றர் (அல்பி மோர்கல்)
 • அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் – சுரேஷ் ரெய்னா (161 போட்டிகள்)
 • அதிக கேட்சுகள் பிடித்த வீரர் – சுரேஷ் ரெய்னா (86 கேட்சுகள்)
 • முதல் ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர் – லஷ்மிபதி பாலாஜி (2008ஆம் ஆண்டு)
 • சிறந்த பந்துவீச்சு சராசரி – பொலிஞ்சர் (18.72)
 • அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள வீரர் – சுரேஷ் ரெய்னா (4540 ஓட்டங்கள்)
 • மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்து வெற்றி பெற்ற அணி – சென்னை 116-9, பஞ்சாப் 92/8 (2009ஆம் ஆண்டு)
 • அதிக வெற்றி சதவிகிதம் கொண்ட அணி – சென்னை சூப்பர் கிங்ஸ் (60.68 சதவிதம்)
 • 2015ஆம் ஆண்டில் பர்ப்பிள் தொப்பி வெற்றியாளர் – டுவைன் பிராவோ (24 விக்கெட்டுகள்)
 • 2014ஆம் ஆண்டில் பர்ப்பிள் தொப்பி வெற்றியாளர் – மோஹித் ஷர்மா (23 விக்கெட்டுகள்)
 • 2013ஆம் ஆண்டில் பர்ப்பிள் தொப்பி வெற்றியாளர் – டுவைன் பிராவோ (32 விக்கெட்டுகள்)
 • 2013ஆம் ஆண்டில் ஆரஞ்ச் தொப்பி வெற்றியாளர் – மைக்கேல் ஹஸ்ஸி (733 ஓட்டங்கள்)
 • 2009ஆம் ஆண்டில் ஆரஞ்ச் தொப்பி வெற்றியாளர் – மேத்யூ ஹைடன் (572 ஓட்டங்கள்)
ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள்! 1

Back to top button