செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து : இரு விசேட அதிரடிப்படையினர் பலி..! 6பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Source: virakesari.lk

Back to top button