விளையாட்டு

இந்தியா v ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு ‘சாதனை இலக்கு’ நிர்ணயித்தது இந்தியா

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று விளையாடி வருகின்றன . டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்
ரோகித் ஷர்மா, கோலி அரை சதம் அடித்தனர், ஷிகர் தவான் சதமடித்துள்ளார். ஹர்டிக் பாண்ட்யா 48 ரன்கள் எடுத்தார்
உலகக்கோப்பையில் இந்தியாவின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இது
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இதுவரை 11 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளது.
மூன்று முறை மட்டுமே இந்தியா வென்றது. எட்டு முறை ஆஸ்திரேலியாவுக்கே வெற்றி
1999-ல் ஓவல் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்துள்ளது
இந்தியா v ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு 'சாதனை இலக்கு' நிர்ணயித்தது இந்தியா 1
India v Australia

Back to top button