செய்திகள்

“சஜித்தை களமிறக்கினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை அமைக்க முடியும்”

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்கிக் கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்த நாங்கள் முயற்சிக்க வில்லை. அதற்கு இடமளிக்கப் போவதும் இல்லை. பலவருடகாலமாக மக்கள் மத்தியில் இருந்துவரும் எதிர்பாரப்பை நிறைவேற்றவே முயற்சிக்கிறோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும்  குறுகிய காலமே இருக்கிறது. இவ்வாறானவொரு  சூழ்நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்கிக் கொள்ள முடியும். இது குறித்து விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புகிறோம்.

கட்சியிலுள்ள முக்கியமான உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த காலம் இதுவல்ல என்றும்  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித்துக்கு மாறாக வேறு எவரையாவது வேட்பாளராக களமிறக்குவதில் எதிரணியினரே அதிக அக்கறை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Back to top button