விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: வெற்றி பெற்ற இங்கிலாந்து; விமர்சனத்துக்குள்ளாகும் சூப்பர் ஓவர் விதி

ஐசிசிபடத்தின் காப்புரிமைICC / TWITTER

ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.
ஆனால் பலரது மனங்களையும் நியூசிலாந்து அணியே வென்றதாக கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல உலகின் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் இதையே சொல்கிறார்கள்.
ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி, சூப்பர் ஓவருக்கு செல்ல சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், ஐசிசி விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுதாக அறிவிக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் சர்வதேச ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிரெட் லீ, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் இந்த விதிமுறை மிகவும் மோசமானது என்றும், இதனை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விதிமுறையை முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் பலரும் இங்கிலாந்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தாலும், நியூசிலாந்துக்காக வருந்துவதாகவும், ஒரு சிறப்பான அணி என்று நியூசிலாந்து பெயர் வாங்கி, பலரின் மனங்களை வென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

Back to top button