படைத்தரப்பினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தலமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் இலங்கை காவல்துறை பயன்படுத்தப்படும் தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம், அந்தக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
-
கீரை வகைகளும், அதன் ஆரோக்கிய நன்மைகளும்:February 12, 2025
இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதற்கான விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் https://np.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர், காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து, ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
Sources : – SBS Tamil