நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்: சில சுவாரசிய தகவல்கள்
சூரிய கிரகணம் : 2019 க்கு பிறகு 2031ல் தான் மீண்டும் நிகழும்
இலங்கை :-
இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள்.
கிரகணம் என்பது என்ன?
கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். சூரிய கிரகணம் மூன்று வகைப்படும். முழுச் சூரிய கிரகணம் , வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம்.
சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால், அது முழுச் சூரிய கிரகணம். நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்புவளையம் போல் காட்சியளிக்கும். இதை நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறோம். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல், ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். சுனாமி என்ற கடல் பேரலை ஏற்பட்ட 15 வருடம் நிறைவடையும் தினத்திலேயே இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும், கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில் அரைபகுதி நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் காட்சி அளிக்கும் என்றும் பெரேரா தெரிவித்தார்.
வளைய சூரிய கிரகணம் தெளிவாக காட்சியளிக்கும். அத்தோடு இந்த வளைய சூரிய கரகணத்தை நாளை காலை 8.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான காலப்பகுயில் இலங்கையர்களினால் காணக்கூடியதாக இருக்கும்.
இந்த முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 4 நிமிடங்களுக்கு இடம்பெறக்கூடும். இது ஆக கூடுதலாக வவுனியாலில் காலை 9.00 மணிக்கு காட்சியளிக்கும். கிளிநொச்சியில் காலை 9.36 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் காலை 9.35 மணிக்கும் திருகோணமலையில் காலை 9.38 மணிக்கும் காட்சியளிக்கும். ஆத்தர்சி கிளாக் நிறிவனத்தின் மூலம் இந்த கிரகணத்தை அவதானிப்பதற்காக வடக்கில் பல இடங்களில் ஆய்வு மட்டத்தில் முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் ஊடக உதவிப்பணிப்பாளர் சிந்தன விஜயவர்தன தெரிவித்தார்.
இதேபோன்று மன்னார் வவுனியா, யாழப்பாணம் போன்ற நகரங்களை கேந்திரமாக கொண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதினால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயனபடுத்தி பார்க்க வேண்டும். வெல்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 14 இலக்க கண்ணாடியை பயன்படுத்தி இதனை பார்வையிட முடியும். இந்த சூரிய கிரகணம் குறித்து சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, ‘டிசம்பர் 26 ஆம் திகதிநிகழும் சூரிய கிரகணம் ஒரு அரிதான வான் நிகழ்வு. இதை தமிழகத்திலும் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.
BBC News : –
டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.
அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும் என்று பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.
ஆனால் , சென்னையைவிட கோயம்பத்தூர், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் மிகவும் கடுமையாகவே காட்சி அளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும் இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்.
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 26) தென்படக்கூடிய கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த கிரகணத்தை நேரடியாக காண்பது கடினம் என்பதால், சென்னை பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி உதவியுடன், சூரிய கிரகணத்தின் பிரதிபலிப்பை திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும். இந்த கிரகணம் வழக்கம் போல் அல்லாமல் மூன்று மணி நேரம் தோன்றக்கூடிய நீண்ட கிரகணம் என்பதால் நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
Sources : BBC