செய்திகள்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அமைச்சரவை உப குழு!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் அமைச்சரவை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளது.

அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழு இது குறித்து ஆலோசித்து அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

Back to top button