செய்திகள்

ஆட்டிப்படைக்கும் சனி குருவுடன் இணைவதால் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா? துலாம், விருச்சிகம், தனுசுவின் முழு பலன்கள்

தமிழ் மாதங்கள் ஆவணி மாதம் 15 நாட்களும் புரட்டாசி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம் செப்டம்பர் மாதம்.

சூரியனின் பயணம் சிம்மராசியிலும் கன்னி ராசியிலும் இருக்கும். ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, குரு, கன்னி ராசியில் புதன், கன்னி ராசியில் உள்ள சுக்கிரன் செப்டம்பர் 5ஆம் தேதி துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

சிம்ம ராசியில் உள்ள செவ்வாய் மாத முற்பகுதியிலேயே இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த குரு பகவான் மகர ராசிக்கு வக்ர கதியில் திரும்பி பின் நேர்கதியில் பயணத்தை தொடங்குகிறார்.

செப்டம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி சேர்க்கையினால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் ராசிநாதன் உங்க ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஆளுமைத்தன்மை அதிகரிக்கும். தேவையானவை வீடு தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

விரைய ஸ்தானத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேகமாக செயல்பட்டாலும் விவேகமாகவும் வேலை செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரபகவானின் அருள் கிடைக்கிறது. காரிய வெற்றி ஏற்படும் மாதமாகும். சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராசி அதிபதி சுக்கிரன் உங்கள் ராசியில் வந்து அமர்வதால் திருமண தடைகள் நீங்கும். சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.

திருமணம் சுப காரியம் கை கூடி வரும். வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் விபரீத ராஜயோகமும், மாளவியா யோகமும் தேடி வரும். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் உங்களுக்கு புதன், சுக்கிரன் வலிமையாக சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும்.

சமூகத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். வேலை செய்யும் இடத்தில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். அழகு அதிகரிக்கும் முகப்பொலிவு கூடும்.

தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மின்சாதன பொருட்களைக் கையாளும் போது விழிப்புணர்வு அவசியம்.

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. 2ஆம் வீட்டில் கேது இருப்பதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். வெளிநாட்டில் வேலை தேடி முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். முதலீடுகள் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, செப்டம்பர் மாதத்தில் உங்கள் ராசிக்கு பத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு.

பதவி யோகம் தேடி வரும். அரசு வேலை செய்ய முயற்சி செய்யலாம். லாப ஸ்தானத்தில் புதன் உச்சமடைந்து பயணம் செய்கிறார். 5 ஆம் தேதி செவ்வாய் வந்து லாப ஸ்தானத்தில் இணைகிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் லாபம் வரும் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். விபரீத ராஜயோகம் தேடி வரும். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் லாப ஸ்தானத்திற்கு வந்து செவ்வாயுடன் இணைகிறார். மூத்த உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பிரமோசன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும் வரும். மன நிம்மதியும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். பண வரவு தாராளமாக இருக்கும்.

திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக மாத முற்பகுதியில் பேசி முடிவு பண்ணலாம். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. குரு மூன்றாம் வீட்டிற்கு வந்து சனியோடு இணைவதால் சில தடை தாமதங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான வேலைகளில் முட்டுக்கட்டைகள் வரலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செவ்வாய்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கலாம். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

தனுசு 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் இணைந்த வாரமாகும். நவ கிரகங்களும் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானம், பத்தாம் வீடான தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானம் என பயணம் செய்கின்றன.

மாத முற்பகுதியில் சூரியன் செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் பயணிக்கும் ஆட்சி பெற்ற புதன் லாபத்தையும் பண வருமானத்தையும் தருவார். வேலையில் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தர்ம கர்மாதிபதி யோகம் தேடி வரப்போகிறது. ஒன்பதாம் அதிபதி சூரியன் ஆட்சி பெற்ற புதனோடு பத்தாம் வீட்டில் இணைகிறார். லாப ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரன் சுக போகங்களைத் தருவார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்

உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். சனி குரு இணைவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மாணவர்களின் எதிர்கால திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். காதல் கைகூடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம் காரியங்களில் வெற்றி உண்டாகும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல தகவல் தேடி வரும். சொத்துக்கள் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். பெண்களின் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். மொத்தத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

Back to top button