செய்திகள்

இணையவழியூடாக நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்

பொருட்களை விற்பனை செய்வதற்கான இணையவழி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் வெலிகமவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 29 வயதுடைய நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபருக்கு பல்வேறு தேசிய அடையாள அட்டை எண்களின் கீழ் பல வங்கி கணக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் குறித்து முறையிட பொதுமக்கள் 0718 591 753 என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Back to top button