செய்திகள்

இந்திய – சீன எல்லை பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்

இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி இரவு மோதல் நடந்த பல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது.

பதுங்குக் குழிகள் கூடாரங்கள் ராணுவ தளவாடங்கள் தளங்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது அந்த படங்கள் மூலம் தெரிய வருகிறது.

இந்த கட்டுமானங்கள் எவையும் சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை; அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்புவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது சமீபத்திய பதற்றத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து நடந்த இருதரப்பு ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.

சீன ராணுவத்தினரும் காயமடைந்தனர் அல்லது உயிரிழப்புகளை சந்தித்தனர் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், இது குறித்த தகவல்கள் எதையும் சீன அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை வீரர்களின் மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் இந்த சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேக்சார் எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றால் எடுக்கப்பட்டவை.

கல்வான் நதியை நோக்கி சீனா கட்டியெழுப்பி உள்ளதாக கருதப்படும் இந்த கட்டடங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்திய மற்றும் சீன தரப்புகள் இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சீன எல்லையில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ள படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்படத்தின் காப்புரிமை MAXAR TECHNOLOGIES/REUTERS

இந்திய-சீன எல்லையில் பதற்றம் உண்டானதைத் தொடர்ந்து தங்கள் படைகளை நிலைநிறுத்திய இடங்களிலிருந்து தத்தமது படையினரை பின்வாங்க செய்வதாக உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட பின்பு, பதற்றம் தணியும் என்று கருதப்பட்ட சூழலில் ஜூன் 15ம் தேதி மற்றும் ஜூன் 16-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டனர்.

இந்த மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே உருவாகியுள்ள பதற்றத்தை தணிக்க விரும்புவதாக இரு நாட்டு அரசுகளும் பொதுவெளியில் தெரிவித்துள்ளன.

ஜூன் 6ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதைப் போல பதற்றத்தை தணிக்கும் நோக்கில் படையினரை பின்வாங்க செய்யவும் இருதரப்பினரும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில் என்ன தெரிகிறது?

“கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய சீன ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவில் இது அமைக்கப்பட்டுள்ளது,” என்று இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் அஜய் சுக்லா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ராணுவ அதிகாரிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்த சமயம் மற்றும் ஜூன் 15 அன்று நடந்த இருதரப்பு மோதல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்படத்தின் காப்புரிமை MAXAR TECHNOLOGIES/REUTERS
மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்

மே மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இத்தகைய கட்டுமானங்கள் எதையும் காண முடியவில்லை.

முன்னாள் இந்திய வெளியுறவு அதிகாரிகள் விவகாரங்களில் இந்த வருமான பி. ஸ்டோப்தான் இந்தக் கட்டுமானங்கள் கவலையளிப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்திய அரசு இது குறித்து படங்களையோ அறிக்கையோ எதையும் வெளியிடவில்லை. அதனால் இது குறித்து பேசுவது மிகவும் கடினமானது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது சீனத் தரப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்பியுள்ளது தெரிகிறது என்றும் எல்லைப் பகுதியில் இருந்து சீனா இன்னும் பில் வாங்கவில்லை என்றும் தெரிகிறது என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்திய சீன எல்லைப் பகுதியில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்தார் .

இந்திய ராணுவத் தளபதியான ஜெனரல் எம்.எம் நர்வானே இந்திய-சீன எல்லைப் பகுதிகளுக்கு, புதனன்று பயணங்களை மேற்கொண்டு அங்கு ராணுவத்தின் தயார் நிலை குறித்து மேற்பார்வையிட்டார் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையும் அவர், எல்லையில் சில இடங்களுக்கு செல்ல உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Back to top button