செய்திகள்

இந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் அதிசார புதன் பகவான்.. என்னென்ன பலன்கள் கிடைக்கும்

மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதியான புதன் பகவான் மார்ச் 11 மகாசிவராத்திரி அற்புத நாளில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதுவரை அதிசார நிலையில் இருந்த புதன் பகவான் தற்போது முறையாக கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். மார்ச் 11 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை கும்பத்தில் அமர்ந்து பல்வேறு பலன்களை தர உள்ளார்.

மேஷம்

மேஷ ராசிக்கு புதன் பகவானின் இந்த பெயர்ச்சி பல்வேறு வகையில் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக முன்னேறும். உங்களுக்கு வர வேண்டிய பணத்தைப் பெற முயன்றால் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நற்பலனைப் பெறுவீர்கள்.

மேலும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான அற்புத பலனைப் பெறலாம். புதன் பகவான் பெயர்ச்சியால் கணவன் – மனைவி இடையேயான அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

காதலில் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அது திருமணம், குழந்தைப் பேறு போன்ற பாக்கியத்தால் ஏற்படும். மாணவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும், போட்டித் தேர்வில் சிறிய முயற்சியால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு புதன் பகவான் சாதகமான நிலையில் இருக்கிறார். இந்த காலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் உங்கள் வேலையில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது.

தந்தையுடனான உறவு பலப்படும். உங்களின் ஆன்மீக ஈடுபாடு சிறப்பாக இருக்கும். எந்த தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வெற்றியைப் பெறுவீர்கள்.

துலாம்

புதன் பகவானின் பெயர்ச்சி துலாம் ராசிக்கு அருமையான யோக பலனாக அமைய உள்ளது. இந்த காலத்தில் உங்களில் தொழில் வியாபாரத்தில் வெற்றியும், முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கும்.

கடின முயற்சியால் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்.இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடங்கக்கூடிய புதிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதில் சிறப்பான நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மேலும், உத்தியோகஸ்தர்களுக்கு மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக அமைந்து உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதனின் அமைப்பு ஆனந்தமான நேரத்தைக் கொடுக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையில் ஒரு படி மேலே செல்ல உங்கள் துறையிலும் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மேலும் குடும்பத்துடன் ஒரு சிறப்பான நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள்.

தொழில், உத்தியோகத்தில் உங்கள் வேலையைப் பார்த்து பலர் ஈர்க்கப்படுவார்கள், மேலும் புதிய வாய்ப்புகளுக்கான தேடலுக்கு வெற்றி பலனைத் தரும்.

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பயனைத் தரும். உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். புன்னகையோடு நாட்கள் நகரும். ஆன்மிகப் பணி சிறக்கும்.

தனுசு

உங்கள் வாழ்க்கையில் அமைதியும், வாழ்க்கைத் துணையுடன் நல்ல இணக்கமான சூழலும் இருக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

நீங்கள் ஈடுபட்டுள்ள உங்கள் துறையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும். உங்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். உங்களின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

உங்களின் சிறப்பான அணுகுமுறை, திறமையால் உங்களின் மதிப்பு மரியாதை உருவாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதோடு பொருள் வசதிகள் அதிகரிக்கும். வணிகத் திட்டங்கள் வெற்றி அடையும்.

Back to top button