இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் – உங்களுக்கு தெரியுமா?
நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது.
அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே
1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை
2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன.
அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதில் சில செயற்கைக்கோள்கள் நாம் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் பிடித்தமான படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுகிறது.
அதைத் தவிரப் பிற பொருட்கள் எல்லாம் ராக்கெட் ஏவுதலால் வந்த குப்பைகள்
அதனால் என்ன பிரச்சனை? அந்த 5 லட்சம் பொருட்கள் என்பது நம்மால் கண்டுபிடித்து கூற முடிந்த பொருட்கள்; கண்டுபிடிக்க முடியாமல் பல இருக்கலாம்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய சுற்று வட்டப் பாதையில் ஏதேனும் செலுத்துவதற்கு எளிதானதாகவே உள்ளது.
இது நமக்கு ஒரு நல்ல செய்தியாகத் தெரியலாம் ஆனால் அங்குப் பூமிக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்த போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை. அவற்றைச் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு வசதியும் இல்லை.
எனவே இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், நாம் மேப் பார்ப்பதற்கும், தொலைத் தொடர்பு வசதிகளுக்கும், வானிலையை தெரிந்து கொள்வதும் பாதிக்கப்படலாம்.
இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் இருக்கிறோம் ஆனால் தற்போது வரை இதற்கு எந்த தீர்வும் இல்லை.
2.மணல்
இங்கு நீங்கள் ஒரு குழப்பத்தில் ஆழக்கூடும், நமது கடற்கரைகள் மற்றும் பாலை வனங்களில் மணல் கொட்டிக் கிடக்கும்போது அது எப்படித் தீர்ந்துபோகும் என்று தோன்றலாம்.
மணலை நாம் அதிகப்படியாக சுரண்டுகிறோம்.
இயற்கை முறையாக மணல் உற்பத்தி ஆகும் விகிதத்தைக் காட்டிலும் அதனை நாம் பயன்படுத்தும் விகிதம் அதிக அளவில் இருப்பதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.
மணல் அழிந்து போனால் அது நமது சுற்றுச்சூழல் அமைப்பைப் பெரிதும் அது. அதிகப்படியாக மணலை பயன்படுத்துவதைக் கண்காணிக்கச் சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
3. ஹீலியம்
நாம் சில விழாக்களில் ஹீலியம் நிரப்பிய பலன்களைப் பறக்கவிட்டிருப்போம். ஆனால் அது குறித்து நாம் என்றாவது கவலைப் பட்டிருக்கிறோமா?
ஹீலியமும் நாம் பூமியை தோண்டி கிடைக்கக்கூடிய ஒரு வளம். ஆனால் நம்மிடம் உள்ள இருப்பு சில தசாப்தங்களுக்கு வரும் அளவுக்குத்தான் உள்ளது.
சில நிபுணர்கள் வெறும் 30-50 ஆண்டுகளில் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்படலாம் என்கின்றனர்.
ஹீலியம் வெறும் பலூன்களை மட்டுமே நிரப்பப் பயன்படுவது அல்ல. ஹீலியம் மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பயன்படுவதற்கான காந்தத்தைக் குளிர்ச்சியாக வைக்கவும் இந்த ஹீலியம் பயன்படுகிறது.
எனவே புற்றுநோயை கண்டறிவதிலும், மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்களுக்குமான சிகிச்சையிலும் ஹீலியம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
4.வாழைப்பழங்கள்
தற்போது பெருமளவில் நாம் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாழைப்பழத்துக்குப் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பனாமா நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாம் `கேவண்டிஷ்` என்ற ரக வாழைப்பழத்தை உண்டு வருகிறோம். பனாமா நோய் வாழைமரங்களில் விரைவாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது
1950ஆம் ஆண்டு பனாமா நோயால் ஏறக்குறைய அனைத்து வாழை மரங்களும் அழியும் நிலைக்கு சென்றன.
தற்போது பூஞ்சையைத் தாங்கும் பயிரை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
5.மண்
மரம் செடிகளுக்குத் தேவையான சத்துக்களை மண்தான் வழங்குகிறது.
கடந்த 150 வருடங்களில், உலகின் மண்வளம் பாதியளவு குறைந்துவிட்டது என்கிறது டபள்யு டபள்யு எஃப் என்ற அரசு சாரா நிறுவனம். ஆனால் ஒரு இன்ச் மண் உருவாக 500 வருடங்களாகும்.
மண் அரிப்பு, தீவிர விவசாயம், மரங்களை அழிப்பது, உலக வெப்பமாதல், ஆகிய அனைத்தும் மண்வளம் குறைவதற்கான காரணங்கள். இந்த மண் வளத்தை நம்பிதான் சர்வதேச உணவு உற்பத்தி இருக்கிறது.
6.பாஸ்பரஸ்
இதை முதலில் கேட்கும்போது பாஸ்பரஸ் என்பது நமது அன்றாட வாழ்வில் அதிகம் தேவைப்படாத ஒன்றாக தோன்றலாம்.
இது உயிரியல் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. விவசாயத்துக்கு தேவையாக பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கவும் இந்த பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. அதற்கு மாற்று இல்லை.
தாவரம் மற்றும் விலங்குகளின் கழிவு மூலம் இவை மண்ணுக்குள் மீண்டும் செல்வதற்கு பதிலாக, விவசாயப் பொருட்களின் மூலம் நகரத்திற்குள் செல்கிறது நாம் அதை கழுவி சாக்கடைக்குள் விடுகிறோம்.