செய்திகள்

இன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, அரசாங்கத்தால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Back to top button