செய்திகள்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு நாளை முதல் இடைநிறுத்தம்!

தற்போது நடைபெற்று வரும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடானது நாளை முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தனது பயணக் கட்டுப்பாடுகளை தளத்தியதிலிருந்து 65 நாடுகளிலிருந்து 16,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மணிநேரங்களில், மாலத்தீவு மற்றும் ஜோர்தானிலிருந்து சுமார் 500 இலங்கையர்களுடன் இரண்டு விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஜூலை 14 அன்று தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர் இது திருப்பி அழைத்து வரும் சேவையில் ஈடுபடும் கடைசி விமானங்களாகும்.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு போதுமான வசதிகள் மற்றும் ஊழியர்களை ஒதுக்க முடிந்ததும் நாட்டுக்கு திரும்ப அழைத்து வரும் செயற்பாடானது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button