செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்

இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 6 பேருக்கு கொரோனா எனும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கும், ஐக்கிய இராச்சியம் மற்றும் டுபாயிலிருந்து நாடுதிரும்பிய இருவருக்கும், கொரோனா  தொற்று நேற்றையதினம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா  தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,0 54 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 37 பேர் நேற்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,748 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை 295 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button