செய்திகள்
இலங்கையில் 13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் கொரோனா தொடர்பான சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுள் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 50, 37 வயதுகளையுடைய இரு ஆண்களும் அடங்குவர்.
இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 21 ஆக அதிகரித்துள்ளது.
Source https://www.virakesari.lk/article/77932