செய்திகள்

ஊரடங்கு அல்ல..! ஆனால் 3 நாட்கள் தொடர் பயணத்தடை: வெளியானது விசேட அறிவிப்பு

நாட்டில் நாளை (13.05.2021) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

மரக்கறி, பழவகைகள், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்

இதேவேளை, முன்னதாக கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இன்று 12 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை எதிர்வரும் மே மாதம் 31 திகதி வரை இரவு நேரப் பயணத்தடை ஒவ்வொரு தினமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : virakesari.lk

Back to top button