செய்திகள்

ஏழரை சனி ஆரம்பம்! யாரையெல்லாம் விரைய சனி வாட்டி வதைக்க போகிறாரோ? இந்த 3 ராசிக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மகரம் ராசியில் சந்திரன், சனி, கும்பம் ராசியில் சூரியன்,புதன் மேஷம் ராசியில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் கன்னி,துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் கேது, குரு உடன் இணைந்திருக்கிறார்.

மூன்றாம் வீட்டில் ராகு பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் ராசியில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

புதன் எந்த பிரச்சினையும் தரமாட்டார். ராசியில் உள்ள சுக்கிரனால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சுக்கிரன் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும்.

குரு உங்க ராசியை பார்க்கிறார். சுக்கிரன் உங்க ராசியில் அமர்ந்திருக்கிறார். இதனால் நன்மைகள் அதிகம் நடக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும்.

செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. காதல் மலரும் காலம் இது என்றாலும் தேர்வு செய்வதில் கவனம் தேவை.

பெண்களுக்கு இது அற்புதமான வாரம். புரமோசன் தேடி வரும். சிலருக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் இரண்டாம் வீட்டில் ராகு, உங்க ராசிநாதன் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

பத்தாம் வீட்டில் சூரியன், புதன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு, செவ்வாய், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு அற்புதமாக உள்ளது.

பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.

விரைய செலவுகள் சுப செலவுகளாக ஏற்படும். சூரியன் பத்தாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். சுப செலவுகள் ஏற்படும்.

வண்டி வாகன யோகம் வரும். சனி உங்களுக்கு பாக்ய சனியாக இருப்பதால் நிறைய பாக்யங்களை தருவார். உங்களுக்கு இந்த வாரம் செலவு அதிகமானலும் வருமானமும் அதிகமாக வரும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு களத்திர ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சின்னச் சின்ன மனக்கசப்புகள் நீங்கும். காதல் மலரும் காலம், மனதிற்கு பிடித்தமானவரை நீங்கள் சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். அடிப்படையான வசதிகள் கிடைக்கும்.

மாணவர்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

இந்த வாரம் காதலர்கள் சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வீண் வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள்.

பணம் விசயங்களில் கவனமாக இருங்க யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க கடன் வாங்கி கொடுக்காதீங்க. வாக்கு கொடுக்காதீங்க மாட்டிக்கொள்வீர்கள். புதன்கிழமை நீங்க பெருமாளை வணங்குங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, பத்தாம் வீட்டில் சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் புதன்,சூரியன், ஏழாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, கேது செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்த வாரம் உங்க ராசிக்கு ராசி நாதன் சந்திரன் நிறைய சந்தோஷங்கள் தருவார். இந்த வாரம் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும்.

வேலையில் இடமாற்றம் நல்ல முறையில் நடைபெறும். மார்ச் மாதத்தின் இறுதியில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். இன்கிரிமென்ட் பேச்சுவார்த்தை உங்களுக்கு நன்மையில் முடியும். மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் ஏற்படும்.

இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு படித்து ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதி பாருங்க. தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறலாம். கோபமாக பேசாதீங்க வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க.

புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலைகள் கிடைக்கும். இருக்கிற வேலைகளை விட்டு விட வேண்டாம். சுய தொழில் செய்பவர்களுக்கு சில சங்கடம் வரலாம் கவனம் தேவை. பெண்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் சூரியன், புதன், ஆறாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சந்தோஷம் அதிகமாகும். பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புகள் தீரும்.

களத்திர ஸ்தானத்தில் சூரியன் புதனோடு சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டில் கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். இந்த வாரம் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் ஒத்திப்போடுவது ரொம்ப நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

ஒருமுறைக்கு இருமுறை நன்றாக எழுதிப்பாருங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். யாருடனும் சண்டை சச்சரவு போட வேண்டாம். அமைதியாக ஒதுங்கி போய்விடுங்கள் அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது. தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க கோபம் குறையும் பாதிப்புகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஆறாம் வீட்டில் சூரியன்,புதன், சனி இந்த வாரம் உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் செவ்வாய், கேது, குரு, இணைந்திருக்கிறார்கள்.

அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 28 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை.பேச்சில் கவனம் தேவை.

நிதி சிக்கல்கள் வரலாம். முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்க தன்னம்பிக்கை இந்த மாதம் குறையும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

மாணவர்கள் பெரியவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. சுறுசுறுப்பாக படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு நேரம் என்பதால் நன்றாக படிங்க தெளிவாக எழுதி பாருங்க.

எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. இல்லாவிட்டால் உங்களுக்கு கஷ்டம்தான். இந்த வாரம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் இந்த வாரம் வேலையில் கவனம் செலுத்துங்கள். நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் துளசி மாலை போட்டு வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் ஐந்தாம் வீட்டில் புதனோடு இணைந்திருக்கிறார். சனி நான்காம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள்.

களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் 1,2020 பிற்பகல் 1.18 மணி முதல் மார்ச் 3,2020 இரவு 11.03 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.

மார்ச் 28, 2020 இரவு 7.30 மணி முதல் மார்ச் 31,2020 காலை 6.05 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம்.

வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்க ராசிநாதனின் பார்வை ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியின் மீது விழுகிறது. திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வார முற்பகுதியில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க.

மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். படிப்பில் உற்சாகம் அதிகமாகும் தேர்வு நேரம் என்பதால் நன்றாக படிப்பீர்கள். எதிர்கால மேற்படிப்பு பற்றி நன்றாக திட்டமிடலாம். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

விசா கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் நிறைய பண வருமானம் வரும். பெண்கள் அதிக நகை வாங்கலாம். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் நான்காம் வீட்டிலும் சனி மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மார்ச் 3,2020 இரவு 11.03 மணி முதல் மார்ச் 06,2020 காலை 4.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல வாரம். படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். இளைய தலைமுறையினருக்கு காதல் மலரும் என்றாலும் அந்த காதல் உறவில் கவனம் தேவை. செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரியன் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதனோடு இணைந்திருக்கிறார்.

சனி குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் உங்க ராசியில் கேது, குரு, செவ்வாய் இணைந்திருக்கிறார்கள். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார்.

அடைகிறார். தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகி விட்டது என்றாலும் பாத சனியாக இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் நாவடக்கம் தேவை.

நிலம், வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான மேஷம் ராசியின் மீது விழுகிறது. பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும்.

வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார்.

என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பிலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். குரு பகவானை வியாழக்கிழமை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் விரைய ஸ்தானத்தில் கேது, குரு, செவ்வாய், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்க நிதானமாக பேசுங்க.

அலுவலகத்திலோ வீட்டிலோ சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கிறது. உங்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். சுக்கிரன் உங்களுக்கு நிறைய சுகங்களை தருவார். புதன் வருமானத்தை கொடுப்பார்.

பங்குச்சந்தை முதலீடுகளில் நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். படிப்பில் உற்சாகமாக இருப்பீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் லாபம் வரும். சிலருக்கு இந்த வாரம் வெளிநாடு யோகம் தேடி வருகிறது.

விசாவிற்கு முயற்சி செய்யுங்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்க அன்பானவரிடம் இருந்து சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சந்தோஷம் அதிகமாக சனிபகவானை சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் சூரியன்,புதன். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் குரு,கேது, செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஏழரை சனி காலம் ஆரம்பமாகியுள்ளது. விரைய சனி என்பதால் நிறைய விரைய செலவுகள் வந்தாலும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். சிலருக்கு சோதனையான காலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு படிப்பில் சில பிரச்சினைகள் வரலாம்.

சனி உங்களுக்கு சாதகமாகவே இருப்பார். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகமாகும். மேற்படிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்தைகள் சுபமாக முடியும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குருவின் பார்வையும் குதூகலத்தை கொடுக்கும். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சூரியன்,புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றனர்.

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு,கேது, செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு முக்கிய கிரகங்கள் கூட்டணி நல்ல முறையில் உள்ளது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.

வேலையில் மாற்றம் கிடைக்கும். தர்மகர்மாதிபதி யோகம் கூடியுள்ளதால் நிறைய ஆலய திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். உங்களுக்கு தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள்.

தொழிலில் முதலீடு செய்யுங்கள் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு பண வருமானம் வரும். அம்மா வழியில் பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். இந்த வாரம் சுப பலன்கள் அதிகம் நடைபெறும்.

குரு பகவானை குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Back to top button