ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இதனை கூறினார்.
இதேவேளை குறித்த செய்தியாளர் செய்தியாளர் சந்திப்பில் இணைந்துக்கொண்ட அமைச்சரவையின் இணை பேச்சாளர் பந்துல குணவர்தன மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் போது பல்கலைக்கழக விண்ணப்பங்களுக்காக மாணவர்களுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடடார்.
இதேவேளை கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்பதோடு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.