செய்திகள்

குருவை ஆட்டி படைக்க போகும் அஷ்டமத்து சனி! எந்த ராசியில் தெரியுமா? 2020 இல் என்னென்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி புத்தாண்டின் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சனியும் குருவும் இருப்பதால் சங்கடங்கள் மட்டுமே அதிகம் வரும் என்று நினைக்க வேண்டாம்.

குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. குடும்பம் குதூகலமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும்.

புதிய வேலை கிடைக்கும். சந்தோஷம் படிப்படியாக அதிகரிக்கும் என்றாலும் எட்டாம் வீட்டில் இருக்கும் சனி சங்டங்களை தருவார். பேச்சில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சனிபகவான் அலைச்சலை ஏற்படுத்தி விடுவார்.

கண்டச்சனியால் கணவன் மனைவி பிரச்சினை இருப்பவர்கள் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து போங்க. நீ பெரிதா நான் பெரிதா என்று மல்லுக்கு நிக்காதீங்க விரிதான் அதிகமாகும். காரணம் அஷ்டம சனி ஆட்டித்தான் வைப்பார்.

சனியோட பார்வையும் சரியில்லை. எனவே நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பேசும் வார்த்தைகளை கவனமாக பேசுங்க. பிரச்சினைகள் எதையும் நிதானமாக கையாளுங்கள்.

உங்க ராசியில் இருக்கிற ராகு, அஷ்டமத்து சனி அஷ்டமத்து குருவை ஆட்டி படைக்கும். ஆவணி மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இல்லாவிட்டால் சிக்கல்தான். மொத்தத்தில் இந்த ஆண்டு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. கொஞ்சமாவது சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும். நெருக்கடிகள் தீரும் வருமானம் அதிகமாகும்.

இந்த ஆண்டு என்ன பலன்கள் இப்படி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். இது பொதுவான பலன்தான். உங்க சொந்த ஜாதகத்தில் தசாபுத்தி பலன்கள் சரியாக இருந்தால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும். பாதிப்பு என்று ஒன்று இருந்தால் பரிகாரம் என்று ஒரு இருக்கும்தானே. இந்த ஆண்டில் நீங்கள் பாதிப்புகள் நீங்க குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. என்ன பிரச்சினை என்றாலும் குல தெய்வத்தை மறக்காதீர்கள்.

Back to top button