செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 28 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சுமார் 200 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அனில் ஜசிங்க மேலும் கூறினார்.

இன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button