செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த தொகையானது 462 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 462 பேரில் 118 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதே நேரம் 337 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.