செய்திகள்

கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை – எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.

சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.

பிறகு அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம்.

கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வுபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

இவ்வாறு பரவியது உண்மையா எனக் கண்டறிய அனைத்து விலங்குகளையும் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர், இது துப்பறியும் கதை போல் உள்ளது என்கிறார் லண்டன் விலங்கியல் பேராசிரியர் அண்ட்ரூ கன்னிங்கம் . ஆனால் விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம். குறிப்பாக வௌவால்கள் தான் இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸின் காரணமாக அமைந்தது என்கிறார்.

சீன விஞ்ஞானிகள் ஒரு நோயாளியிடமிருந்து இந்த வைரஸை கண்டறியும்போது வௌவால்களையும் சோதனை செய்தனர்.

பாலூட்டிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பல மைல் தூரங்கள் பறப்பவை. அவை பொதுவாக நோய்க்கு ஆளாகக்கூடியவை இல்லை. ஆனால் வைரஸ்களை பரப்ப அதிகம் வாய்ப்புகள் கொண்டவை.

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட்ஸ் ஜான் கூறுகையில், வௌவால்கள் வைரஸ்களுடன் போராடும் திறன் கொண்டவை. அவை வைரஸால் தாக்கப்பட்டால் தங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் டிஎன்ஏ கொண்டுள்ளன. இதனால் நோய்களுக்கு உள்ளாவதற்கான முன் அது மீண்டிருக்கலாம். இது இப்போதைக்கு நிலவும் ஒரு கருத்து மட்டுமே என்றார் .

வௌவால்கள் ஒருமுறை வைரஸால் தாக்கப்பட்டால் அது தங்களுக்குள் அந்த வைரஸை வளர்த்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ பரப்பி இருக்கலாம் என்கிறார் நாட்டிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் பால்.

இந்த புதிரில் அடுத்து சந்தேகப்படும் விலங்கு எறும்புத்தின்னி. உலகம் முழுவதும் மிகச் சுலபமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரக்கூடிய விலங்கு. அது மட்டுமல்லாமல் இது அழியக்கூடிய நிலையில் உள்ளது . ஆசியாவில் எறும்புத் திண்ணிக்கு கடும் தேவை இருக்கிறது. சீனாவின் பாரம்பரிய மருந்து ஒன்றைத் தயாரிக்க இவை தேவைப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியைச் சீனாவில் பலரும் உண்பர்.

எறும்புத்தின்னிகளில் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் முடிவுக்கு வருவதற்கு முன்னர் விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர், ஏனென்றால் எறும்புத்தின்னி ஆராய்ச்சிகள் இன்னும் வெளிவரவில்லை. அதனால் இதைச் சரிபார்க்க முடியவில்லை.

பேராசிரியர் கன்னிங்கம் கூறுகையில், எந்த சூழல் மற்றும் எத்தனை எறும்புத்தின்னிகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது முக்கியம் என்கிறார்.

”பல எறும்புத்தின்னிகள் ஆராயப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் பரிசோதனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை ஆராய்ந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார் கன்னிங்கம் .

”எறும்புத்தின்னிகள் மற்றும் பிற விலங்குகள் இதில் வௌவால்களும் அடங்கும் , இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,” என கன்னிங்கம் கூறுகிறார்.

”எறும்புத்தின்னிகள் மற்றும் வௌவால்கள் உட்படப் பிற விலங்குகள் இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,” என கன்னிங்கம் கூறுகிறார்.

சீனாவின் வூஹானில் கொரோனாத்தொற்று பரவத் தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சந்தையில் வன விலங்குகளின் மாமிசமும் விற்கப்பட்டன. இதில் உயிருடனும் துண்டுகளாகவும் விற்கப்பட்டன. ஒட்டகங்கள், கோலாக்கள் மற்றும் பறவைகள் ஆகியவை இருந்தன.

கார்டியனில் வெளிவந்த செய்தியில், அந்த சந்தையில், ஓநாய் குட்டிகள், வண்டுகள், தேள்கள் , எலிகள், அணில்கள், நரிகள், புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வௌவால்கள் மற்றும் எறும்புத்தின்னிகள் அதில் இல்லை என்றாலும் சீன உளவுத்துறை இதை விசாரித்து வருகிறது. இதில் என்னென்ன விலங்குகள் இருந்தன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்கிறார் பேராசிரியர் பால்.

இப்போது உள்ள நிலையில் நாம் எதிர்கொள்ளும் பல வைரஸ்கள் வன விலங்குகள் மூலமாகப் பரவுவதுதான். எபோலா , ஹெச் ஐ வி , சார்ஸ் தற்போது கொரோனா வைரஸ். மனிதர்கள் அதை கண்டறிவதால், வனவிலங்குகளுடன் அதிகம் நெருக்கமாவதால் , காட்டை மாற்றியமைப்பதால் , இது போன்ற வைரஸ்கள் வருகின்றன என்கிறார் பேராசிரியர் பால்.

நிலப்பரப்பை மாற்றியமைப்பதன் மூலம் மனிதர்கள் சந்திக்காத பல வைரஸ்களை இப்போது நாம் சந்திக்கிறோம் என்கிறார் அவர்.

கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இது எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால், விலங்குகளைத் தாக்காமல் நம்மால் இதைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் கன்னிங்கம்.

“‘வெளவால்கள் சுற்றுச்சூழல் சுழற்சிக்கு முக்கியம். வண்டுகளால் பூச்சிகளால் பரவக்கூடிய பல நோய்களைத் தடுக்கிறது. மேலும் சில மரத்தின் விதைகள் பரவ உதவி செய்கிறது என்கிறார்கள்” என்கிறார் அவர்.

2002-2003ல் சார்ஸ் பரவியபோது சீனா மற்றும் சில நாடுகளில் வன விலங்கு சந்தைகள் தடை செய்யப்பட்டன. ஆனால் விரைவிலேயே சீனா, வியட்நாம் மற்றும் சில தெற்காசிய நாடுகளில் அது மீண்டும் திறக்கப்பட்டது.

சீனா தற்போது மீண்டும் வன விலங்கு சந்தைகளை மூடி விட்டது. ஆனால் இது நிரந்தரமாக இருக்கும் என சில அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தாலும் இப்போது இதைத் தடுக்க முடியாது. ஆனால் இது போன்ற இன்னொரு சம்பவத்தைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் டயானா பெல்.

Back to top button