செய்திகள்

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஆலய நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது

கொவிட்-19 பரவல் நிலையை கட்டுப்படுத்த ஆலய நிர்வாகத்தினர் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்களில் கொவிட் பரவல் நிலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source : hiru news

Back to top button