செய்திகள்

கோடியில் புரள போகும் சிம்மம்! தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! யாருக்கு பேரதிர்டம்?

சூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் தமிழ் மாதம் தொடங்கும் என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

சனிக்கிழமையன்று கிரகங்களின் தலைவனான சூரியன் கால புருஷ தத்துவத்தில் ஏழாவது ராசியான துலாம் ராசியில் நுழைய உள்ளார்.

மேலும், நவராத்திரி கொண்டாட்டமும் இந்த நாளில் தொடங்குகிறது.

சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் இந்த சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளது. இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

ரிஷபம்

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து ஒதுங்கி இருப்பார்கள். உங்களின் வலிமையின் அதிகரிக்கும். வேலையில் பொறுப்புகளும் அதிகரிக்கக்கூடும். புதிய வருமான ஆதாரம் பெற வாய்ப்புள்ளது. மாணவர்களின் கல்வி சிறக்க வாய்ப்புள்ளது.

​மிதுனம்

குடும்பத்தின் பிரச்சினைகளை நீங்கி அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களை மரியாதையுடன் பார்ப்பார்கள். தந்தைவழி சொத்தின் பிரச்சினைகள் நீங்கும், நீண்ட நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். வணிகத்திற்கான பயணம் வெற்றிகரமாக இருக்கும்.

​சிம்மம்

சிம்ம ராசிக்கு ஐப்பசி மாதம் பல நன்மை கிடைக்கும். உங்கள் வேலையில் மரியாதை மற்றும் லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோருடனான உறவு இனிக்கும். மேலும், தடைப்பட்ட பணம் வந்து சேரும்.

​கன்னி

துலாமில் சூரியனின் சஞ்சாரம் செய்வதால் கன்னி ராசிக்கு பல நன்மை பயக்கும். அரசு தொடர்பான வேலைகள் அதிகாரிகளின் நல்ல முறையில் முடியும். தேவையற்ற செலவுகள் குறைத்துக் கொள்வதன் மூலம் நிதி நிலை கட்டுக்குள் இருக்கும்.வேலைவாய்ப்புகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

​தனுசு

உங்கள் ராசிக்கு சூரிய பெயர்ச்சி நல்ல பலனை தரக்கூடும். இந்த மாதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. பெற்றோரின் பாசம் பெறுவீர்கள்,

மகரம்

ஐப்பசி மாதத்தில் புதிய ஆற்றல் பெற்றத்தைப் போல உணர்வீர்கள், இது குடும்ப உறவுகளை பலப்படுத்தும். தந்தையின் வகையில் நல்ல பலன் கிடைக்கும். வருமான ஆதாரம் அதிகரிப்பதன் மூலம் பண வரவு அதிகரிக்கும். முதலீடு செய்ய இது சிறந்த நேரம்.

Back to top button