செய்திகள்

சுகாதார வழிகாட்டல்களை மீறியமைக்காக 2,905 பேர் கைது

முகக் கவசம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 52 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 2,905 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தற்கு இணங்காத நபர்களை கண்டறிவதற்கான சிறப்பு நடவடிக்கை நாடு முழுவதும் இன்று ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Back to top button