செய்திகள்

சுன்னாகம் முடக்கப்படவில்லை – யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளில் உண்மையில்லை என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி தொடர்பாக எமது செய்திச் சேவை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது, உடுவில் பிரதேசத்தில் மாத்திரமே தற்காலிக நடமாட்டத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Source : Sooriyan fm

Back to top button